விளையாட்டு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் விளையாடுவது சந்தேகம்?

(UTV|COLOMBO)-இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குசல் ஜனித் பெரேரா பயிற்சிகளின்போது உபாதைக்குள்ளாகியுள்ளார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (17) பல்லேகலையில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா உபாதைக்குள்ளாகியுள்ளார்.

இதனால், இன்று அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, குறித்த பரிசோதனை பெறுபேறுகளின்படியே நாளைய போட்டியில் அவர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

கிரஹம் ஃபோர்ட்டின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா மாலிங்க!!!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு கொரோனா