சூடான செய்திகள் 1

இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள இங்கை பிரதமர்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான முக்கியமான சந்திப்பு ஒன்று இந்த வாரம் இடம்பெறவுள்ளது.

த ஹிந்து பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இந்திய பிரதமரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பானது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் மிகவும் முக்கியமானதாக அமையும் என்று, அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

த ஹிந்து பத்திரிகையின் தகவல்படி, இந்திய உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களில் தாமதம் நிலவுகின்றமை குறித்து இந்தியா கரிசனைக் கொண்டுள்ளது.

மேலும் சீனாவின் செல்வாக்கு மேலோங்குகின்றமை தொடர்பிலும் அவதானம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பலாலியில் பிராந்திய விமான நிலையத்தை நிர்மாணித்தால், திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தாங்கிகளின் அபிவிருத்தி விவகாரம், மத்தல விமானநிலைய ஒப்பந்தம் என பல்வேறு விடங்கள் தொக்கு நிற்கின்றன.

இந்த நிலையில், இரண்டு நாடுகளின் பிரதமர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது முக்கியமான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

Whats App மீதான தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தயான் லன்சா தெரிவு