(UTV|COLOMBO)-நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் 1.33 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபாவின் பெறுமதி, இந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பத்தில் வரலாற்றில் முதல் முறையாக 172 ரூபாவை கடந்தது.
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை 171.60 ரூபாயாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 167.73 ரூபாயாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 172.93 ரூபாயாக பதிவாகியுள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 10.8 ரூபாயில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அண்மைக்காலமாக ரூபாவின் பாரிய வீழ்ச்சியினால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]