சூடான செய்திகள் 1

டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கலாம்…

(UTV|COLOMB)-இன்று முதல் மழையுடனான வானிலை மீண்டும் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகின்ற நிலையில், டெங்கு நோய் பரவல் குறித்து அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு நுளம்புகள் பரவாத வண்ணம் தங்களது இருப்பிடச் சூழலை சுத்தமாக பேணுமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் ஒக்டோபர் மாதம் வரையில் டெங்கு நோயின் காரணமாக 43 பேர் உயிரிழந்திருப்பதாக புள்ளிவிரபங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த ஆண்டு மொத்தமாக 39 ஆயிரத்து 783 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக அளவான டெங்கு நோய் பரவல் காணப்படுவதுடன், கம்பஹா மாவட்டத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிக டெங்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோய் தாக்கம் குறைவடைந்துள்ளதாக கருதப்படுகிறது.

எனினும் மழையுடனான வானிலை மீள ஆரம்பிப்பதால், நுளம்புப் பெருக்கமும், டெங்கு நோய் தாக்கமும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரண்டாக பிளந்த்தது மனோ கணேசனின் ஒருமித்த முற்போக்குக்கூட்டணி (காணொளி)

நாட்டின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர்வெட்டு

மேலும் 33 பேர் பூரண குணமடைந்தனர்