சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா இன்று C.I.D முன்னிலையில்

(UTV|COLOMBO)-பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று(16) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, இன்று(16) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்த கொலை சூழ்ச்சி தொடர்பிலும், பொலிஸ் மத்திய ஆயுதக் களஞ்சியத்தினால் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்த எல்.எம்.ஜி வகை துப்பாக்கிகள் இரண்டு, இரண்டு தினங்களுக்கு வெளியில் எடுத்துச் செல்லப்பட்டமை தொடர்பிலும் அவரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

UPDATE-உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர்