வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்து வந்தன.

இலட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இந்தோனேசிய ஜனாதிபதியாக மீளவும் ஜோக்கோ விடோடோ பதவியேற்பு

வாக்கு கேட்டதால் 180 பொலிசாருக்கு இடமாற்றம்

සරසවි අනධ්‍යයන සේවකයන් පිරිසක් අද සංකේත වැඩ වර්ජනයක