கேளிக்கை

ஏ.ஆர்.ரகுமானின் எரிச்சலை மாற்றிய மெடினா

(UTV|INDIA)-இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தற்போது லண்டனில் 2.0 படத்தின் பின்னணி இசை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இந்தி திரையுலகை சேர்ந்த பின்னணி பாடகர் அட்னன் சமியின் ஒரு வயது பெண் குழந்தை தன் தந்தை போனில் இருந்து தவறுதலாக ஏ.ஆர் ரகுமானுக்கு வீடியோ கால் செய்துள்ளார்.

உடனே போனை எடுத்த ரகுமான் குழந்தையுடன் சிரித்துப் பேசி விளையாடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்த அட்னன் ’போனுக்கு பாஸ்வேர்டு போடும் நேரம் வந்துவிட்டது. என் குழந்தை மெடினா என் போனை எடுத்து ஏ.ஆர். ரகுமானுக்கு வீடியோ கால் செய்துவிட்டார்.

பிறகு இருவரும் பேசினர். தொடர்ந்து லண்டனில் 2.0 படத்துக்கு இசையமைக்கும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை அவளுக்குச் சுற்றிக்காட்டினார்” எனப் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள ரகுமான்’அன்புள்ள அட்னன்… அவளின் வீடியோ கால் என் எரிச்சலான மனநிலையை பணிச் சுமைகளை மாற்றிவிட்டது. நன்றி மெடினா. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” எனப் பதிவிட்டுள்ளார். இருவரின் பதிவுகளும் சமூகவலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

சின்மயியை சும்மா விடமாட்டேன்

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திர ஜோடி பிரிந்தனர்

தீபிகா கவர்ச்சி வெள்ளோட்டம்…