சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை-படையினர் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்தும் கனமழை தொடர்கிறது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய வானிலை தகவலின்படி நாட்டின் தென்மேற்கு பகுதியில் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவும் எனவும் மேற்கு, மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டகளிலும் சுமார் 100மில்லி மீற்றர் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கமைய, களனி, உடுகம, பிடிகல, நாகொட, வெலிப்பண்ண, ஹொரவெல, புளத்சிங்ஹல பலிங்கநுவர, வலல்ல, யடதொலவத்த, புத்தளம மற்றும் களனிமுல்ல ஆகிய பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைகளுக்காக வள்ளங்கள், கவச வாகனங்கள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை பரிமாறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது [UPDATE]

கோட்டாவின் இலங்கை குடியுரிமை – வழக்கு விசாரணை ஆரம்பம்

கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித முடிவும் இன்றி நிறைவு