வகைப்படுத்தப்படாத

புகையிரதம் தடம்புரண்டு விபத்து

(UTV|INDIA)-உத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் புகையிரத நிலையம் அருகே நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் புகையிரதம் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 6 பெட்டிகள் தடம்புரண்டதில் அதில் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

முன்னாள் கடற்படைப் பேச்சாளர் உள்ளிட்ட ஐவர் மீண்டும் சிறையில்

ஜப்பான் மன்னரை இன்று சந்திக்கவுள்ள ஜனாதிபதி

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்