உள்நாடு

1000க்கும் மேற்பட்ட விளம்பரங்களை நீக்கிய யூடியூப்!

(UTV | கொழும்பு) –

கூகுள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் யூடியூப் தளத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெறும் 1000க்கும் அதிகமான விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. அந்த விளம்பரங்கள் அனைத்தும் டீப் ஃபேக் செய்யறிவு தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் என்பது கண்டறியப்பட்டது.

பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான டைலர் ஸ்விஃட், ஜோ ரோகன், ஸ்டீவ் ஹார்வி ஆகியோர் இடம்பெறும் போலி விளம்பரங்கள் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருகிவரும் முறைகேடு புகார்களுக்கு இதுபோன்ற போலி விளம்பரங்கள் முக்கியமான காரணமாகவுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது. இதுபோன்ற முறைகேடான போலி விளம்பரங்களை இனம் கண்டறிந்து நீக்கும் பணியை தீவிரமாக செய்துவருவதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டான் பிரியசாத் CID இனால் கைது

“அரிசியல் சூதாட்டம் சூடுபிடிக்கிறது”

எகிறும் IOC எரிபொருள் விலைகள்