வணிகம்

இரண்டு தசாப்தத்திற்குப் பின்னரான வர்த்தக உறவைப் புதுப்பிக்க நாளை குவைத்துக்கு விஜயம் செய்கிறார் அமைச்சர் ரிஷாட்!!!

(UTV|COLOMBO)-இரண்டு தசாப்த காலத்துக்குப் பின்னர் குவைத்துடனான உறவை இலங்கை புதுப்பிக்கவுள்ளது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான பலமான தூதுக்குழுவொன்று இன்று  08 ஆம் திகதி குவைத் பயணமாகிறது.

“21 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் இலங்கை – குவைத் கூட்டுவர்த்தக ஆணைக்குழுவை நாங்கள் புதுப்பிக்கவுள்ளோம். குவைத்துக்கும் இலங்கைக்குமான நீண்டகால உறவில் இது ஒரு சிறந்த திருப்புமுனையாக அமையுமென நம்புகின்றேன்” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னைச் சந்தித்த குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவர் கலாப் பூ தாய்ரிடம் (Khalaf Bu Dhhair) தெரிவித்தார்.

நாளை மறுதினம் 09 ஆம் திகதி குவைத்தில் இடம்பெறவுள்ள இலங்கை – குவைத் கூட்டாணைக்குழுவின், இராண்டாவது அமர்வின் ஆயத்த ஒழுங்குகள் பற்றிய கலந்துரையாடல், கைத்தொழில் மற்றும் வர்த்தக
அமைச்சில் இடம்பெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையை ஏற்று பயணமாகவுள்ள 13 பேர் கொண்ட இந்த உத்தியோகபூர்வ தூதுக்குழுவில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, நிதி, நகர அபிவிருத்தி, வெளிவிவகாரம், உயர்கல்வி
மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சின் அதிகாரிகளும், வர்த்தக திணைக்களம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

“இந்த நிகழ்வானது வர்த்தக முதலீட்டு அபிவிருத்தியில் இரண்டு தரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இருந்தபோதும் எங்களைப் பொறுத்தவரையில், இலங்கையுடனான இந்த சந்திப்பு பெறுமதியானது. இதன்
பெறுபேறுகள் எதிர்காலத்தில் நல்ல பலாபலன்களை ஏற்படுத்தும்” அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் குவைத் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.

வர்த்தக திணைக்களத்தின் தகவலின்படி இலங்கைக்கும் – குவைத்திற்குமிடையிலான வர்த்தக ஒப்பந்தம், 1994ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அத்துடன், கூட்டு ஆணைக்குழுவின் முதலாவது அமர்வின் கூட்டம் 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பில் இடம்பெற்றது.

குவைத் நாடானது, இலங்கையின் 04வது இறக்குமதி பங்காளியாக இருக்கும் அதேவேளை, இலங்கையானது குவைத் நாட்டினுடைய இறக்குமதி பங்காளராக 82வது இடத்தில் உள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான
மொத்த வர்த்தகமானது 2016ஆம் ஆண்டு 46.68 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததுடன், 2017ஆம் ஆண்டு அது 04% சதவீதத்தால் அதிகரித்து 48.56 மல்லியன் அமெரிக்க டொலராக மாற்றமடைந்தது. இலங்கை
தேயிலை, கொப்பரா மரம், மரக்கரி (Wood Charcoal), மீன், மரக்கறி ஆகியன குவைத்திற்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருட்களாகும்.

அதேபோன்று, கனியவளம், இரசாயனப் பசளை, பொலிமர், சோடியம் ஐதரொக்சைட் பெற்றோலிய எண்ணெய், பிளாஸ்டிக், பேப்பர், இரும்பு மற்றும் உருக்கு ஆகியனவே குவைத்தின் பிரதான இறக்குமதிப்
பொருட்களாகும்.

வளைகுடா பிராந்தியத்திலே கட்டார் நாட்டுக்கு அடுத்ததாக, குவைத்தே இரண்டாவது செல்வந்த நாடாகத் திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

-ஊடகப்பிரிவு-

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

அரிசியின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை

தொழில் முயற்சியாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான “மதிப்பீட்டு ஆய்வு” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று கையளிப்பு!