கேளிக்கை

1000 திரையரங்குகளில் பரத்தின் பொட்டு..

(UTV|COLOMBO) ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `பொட்டு’. வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாகவும், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நாயகிகளாகவும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, பரணி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் பேசும் போது,
பரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.
மருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்த படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். படம் குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்றார்.

இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.

 

 

 

 

Related posts

நயன்தாராவுக்காக கலங்கிய சிவகார்த்திகேயன்

அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க…

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு கேள்விக்குறி