சூடான செய்திகள் 1

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் போன்று களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் , மேல் , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரை

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி விளக்கமறியலில்