விளையாட்டு

100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளரான் உமேஷ் யாதவ் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் உமேஷ் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அவர் சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த விக்கெட் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனைப்படைத்தார். இதுவரை 4 இந்திய வீரர்கள் இந்த சாதனைப்படைத்துள்ளனர். புவனேஷ்வர் குமார், ஆஷிஸ் நேஹ்ரா, வினய் குமார், ஜாகீர் கானுக்கு அடுத்து இந்த சாதனையைப்படைத்த ஐந்தாவது இந்தியர் உமேஷ் யாதவ் ஆவார்.

ஐபிஎல் 2018 சீசனில் உமேஷ் யாதவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் இதுவரை யாதவ் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நட்சத்திர வீரர் பிராவோ ஓய்வினை அறிவித்தார்

கெய்ல், சமி, பிராவோ, அப்ரிடி LPL இல் இணைய தயார்

232 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை