உள்நாடுசூடான செய்திகள் 1

15 மில்லியனை செலுத்திய மைத்திரி  : அவரின் மாத வருமானம் இதோ

(UTV | கொழும்பு) –

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என உயர் நீதிமன்றில் பிரேரணை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய தொகையான 85 மில்லியன் ரூபாயை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் வருடத்துக்கு 8.5 மில்லியன் ரூபாய் வீதம் 10  தவணைகளாக செலுத்தப்படும் என அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில், எஞ்சியுள்ள இழப்பீட்டை  2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 வரை வருடாந்தம் வழங்குவதற்கு  அனுமதிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மாதாந்தம் 97,500 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்   54,285 ரூபாயையும் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மூலோபாய அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு