வகைப்படுத்தப்படாத

100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது

(UTV|MEXICO)-மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உள்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஆனால், ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே திடீர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேருக்கு காயம் அடைந்துள்ளனர், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துகுறித்து டுராங்கோ மாகாண கவர்னர் ஜோஸ் ரோசாஸ் ஊடங்களிடம் கூறுகையில், ’விமானம் புறப்படும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது, புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்து ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு அருகே உள்ள நிலத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் நிகழவில்லை’ என தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் பெருமளவில் மீன்கள்

இந்தியப் பிரதமர் நாளை இலங்கை வருகிறார்

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு