உள்நாடு

100 கோடிக்கும் அதிக பெறுமதியான சொகுசு வாகனங்கள்

(UTV | கொழும்பு) –   100 கோடிக்கும் அதிக பெறுமதியான சொகுசு வாகனங்கள்

கொழும்பு துறைமுகத்தின் களஞ்சியசாலையில் உள்ள நானூறு கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான பொருட்கள் அடங்கிய 89 கொள்கலன்களை சுங்கத்துறை பொறுப்பேற்றுள்ளதுடன் ஒரு வாரத்திற்குள் அவற்றை அகற்றுமாறு துறைமுக அதிகாரசபைக்கு உத்தரவிட்டதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்களில் உள்ள சொகுசு வாகனங்களின் பெறுமதி மாத்திரம் 100 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் கொள்கலன்கள் தடுத்து வைக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு பாரிய தொகை நட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், காலாவதியான சுங்கச் சட்டம் இன்றைய நிலைமைக்கு ஏற்றவாறு உடனடியாக திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்திய நபர் மீண்டும் விளக்கமறியலில்

திங்கட்கிழமை பொது விடுமுறை தினமா? பொது நிர்வாக அமைச்சு

மேலும் 50 பேர் பூரண குணமடைந்தனர்