நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (11) மதியம் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என்றும் மேற்படி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்ட மக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடுமென குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.