வகைப்படுத்தப்படாத

100க்கு மேற்பட்ட பள்ளி மாணவிகள் மாயம்

(UTV|NIGERIA)-நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கு மேற்பட்ட மாணவிகள் மாயமாகி உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 8 ஆண்டுகளாக போகோ ஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி இதுவரை 20 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளனர்.

இந்நிலையில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள பள்ளியில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் 100-க்கு மேற்பட்ட மாணவிகளை காணவில்லை என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மொத்தமுள்ள 926 மாணவிகளில் 815 மாணவிகள் வீடு திரும்பியுள்ளனர். மீதியுள்ள 111 பேரை காணவில்லை. அவர்களில் 50 மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். ஆனால் இதுவரை ஒரு வழக்குகூட பதிவாகவில்லை என்றனர்.

சிக்புக் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு கடத்தப்பட்ட 200 மாணவிகளில் 100 பேர் மீட்கப்பட்டனர். மேலும், 100 பேரை தேடும் பணியில் ராணுவம் தீவிரமாக உள்ளது என்றும் போலீசார் கூறினர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

110 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது – மீட்பு பணி தீவிரம்

භික්ෂූන් වහන්සේ සඳහාද සුරක්ෂා රක්ෂණ ක‍්‍රමයක්

கேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு