விளையாட்டு

10 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து இலகுவாக வெற்றி

(UTV|கொழும்பு) – இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது 348 ஓட்டங்களை குவித்தது. 183 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் முக்கிய 4 விக்கெட்களை இழந்து 1‌4‌‌‌4 ஓட்டங்களை எடுத்திருந்தது.

விஹாரி 15 ஓட்டங்களிலும், அஸ்வின் 4 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய ‌அணி 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனால் 9 ஓட்டம் எடுத்தால் வெற்றி ‌என எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 ஆவது ஓவரிலேயே வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Related posts

மொஹமட் ஹபீஸுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

என் அம்மாவுக்காக இதை செய்யுங்கள்-பிரபல கிரிக்கெட் வீரர்

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை