உள்நாடு

10 ஆம் தரத்தில் நடைபெறப்போகும் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை!

(UTV | கொழும்பு) –

கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் கூறுகையில்,“10 ஆம் தரத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை நடத்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் தற்போது உரிய தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றோம்.எதிர்காலத்தில் கல்வி மாற்றத்திலும் இந்த விடயம் பரிசீலிக்கப்படும்.

இந்த செயற்பாட்டை திடீரென செய்ய முடியாததுடன், 1, 6 மற்றும் 10 ஆகிய தரங்களில் ஆரம்பிக்கும் வகையில் ஆரம்பம், கனிஷ்ட இளநிலை மற்றும் சிரேஷ்ட இளநிலை என்ற அடிப்படையில் மூன்று வகைப்படுத்தலின் கீழ் இது மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் தாம் பயணிக்க வேண்டிய எதிர்கால திசையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமான சமூகத்தை உருவாக்கும் அடித்தளம் தயார் செய்யப்பட வேண்டும் “எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை விதித்த கொலராடோ உயர்நீதிமன்றம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்

நாடளாவிய ரீதியில் மேலதிக எரிபொருட்களை விநியோகிக்க நடவடிக்கை