வகைப்படுத்தப்படாத

1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு

(UTV|AMERICA) அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் நேற்று (18ஆம் திகதி) கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சந்தர்ப்பம் இதுவென அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது.

16.5 தொன் எடையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் பிலடெல்பியா பகுதியில் கப்பலொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

7 கொள்கலன்களில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளதுடன் பிலடெல்பியா பிராந்திய நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கப்பல் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கப்பலில் போதைப்பொருள் ஏற்றப்பட்டமை தொடர்பில் அவர்கள் சாட்சி வழங்கியுள்ளனர்.

 

 

Related posts

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

மியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள்-ஷேக் ஹசினா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சீனா பயணமானார்