சூடான செய்திகள் 1

மூன்று வாரங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTVNEWS|COLOMBO ) – எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு களுத்துறை, களுத்துறையை அண்மித்த பிரதேசங்கள் சிலவற்றில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கெத்ஹேன நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகளின் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி​ வாதுவ, வஸ்கடவ, பொத்துபிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொடை, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கும் பிலிமினாத்த, பொம்புவல, மக்கோன, பேருவளை, களுமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்கா நகர், பெந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அமெரிக்காவில் இல்லாத ஊடக சுதந்திரம் இன்று இலங்கையில்-அமைச்சர் மங்கள

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது