உள்நாடு

குழந்தைகள் உயிரிழக்க காரணமான இந்திய மருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை

(UTV | கொழும்பு) –  காம்பியாவில் சிறுவர்கள் குழுவொன்றின் மரணத்திற்கு காரணமானதாகக் கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு வரவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று(06) தெரிவித்தார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் 4 வகையான மருந்துகளால் காம்பியாவில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது.

அதன்படி, இந்தியாவில் மைடன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 4 மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்க உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது.

இதற்கு காரணம் காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் முதல் சிறுநீரக கோளாறு காரணமாக 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் சளிக்கான திரவ மருந்திற்கும் அந்த மரணத்திற்கும் தொடர்பு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வக அறிக்கை சமீபத்தில் மைடன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரிக்கும் மருந்துகளில் ‘அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிகமாக’ டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் என்ற கலவைகள் இருப்பதை உறுதிப்படுத்தியது.

இந்த கலவைகளின் அதிக அளவு மனித சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அறிக்கை வலியுறுத்தியது.

இதன் காரணமாக ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்ட நான்கு மருந்துப் பொருட்களையும் உடனடியாக காம்பியா சந்தையில் இருந்து அகற்ற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், தற்போது காம்பியாவில் மட்டுமே சட்டப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் மருந்துகள் முறைசாரா சந்தை மூலம் மற்ற நாடுகளில் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சர்ச்சைக்குரிய மருந்துகள் காம்பியாவுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்று இந்தியா கூறுகிறது.

ஆனால் இந்த வெளிப்பாட்டால், ‘உலகின் மருந்தகம்’ என அழைக்கப்படும் இந்தியாவின் இமேஜ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய மருந்துகளின் அபாயத்தை இலங்கைக்கு வெளிப்படுத்த முடியுமா என சுகாதார அமைச்சர் திரு.கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கேட்டோம்.

அமைச்சர் கூறினார்,

“இது தொடர்பாக நாங்கள் உடனடியாக சிறப்பு விசாரணை நடத்தினோம். இலங்கையில் அவ்வாறான மருந்து எதுவும் கொண்டுவரப்படவில்லை என்ற பதில் அங்கு கிடைத்தது. அதைக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை இல்லை” என்றார்.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு நான்கு சங்கங்கள் ஆதரவு.

editor

கொரோனா அச்சுறுத்தல் : 88 ரயில் சேவைகள் இரத்து

புதிய இராணுவத் தளபதி மற்றும் புதிய கடற்படைத் தளபதி நியமனம்

editor