உள்நாடு

ஹோமாகம பகுதியில் துப்பாக்கிகள் மீட்பு : விசாரணைகள் CID இடம்

(UTV|கொழும்பு) – ஹோமாகம – பிட்டிபன பகுதியில் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் 19 துப்பாக்கிகள் காணப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

எனினும் 12 துப்பாக்கிகளே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய 7 துப்பாக்கிகள் எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தடுத்துவைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட தாரகவிடமும் ககன எனும் நபரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஹோமகம – பிட்டிபன, ​ஹைலெவல் வீதியை அண்மித்துள்ள மொரகஹஹேன வீதியில் அமைந்துள்ள மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையத்திலிருந்து 12 துப்பாக்கிகள் நேற்று(29) கைப்பற்றப்பட்டன.

இவற்றில் T 56 ரக 11 துப்பாக்கிகளும் T 81 ரக துப்பாக்கி ஒன்றும் உள்ளடங்குகின்றன.

Related posts

நாளை கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு!

சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை கொண்டுவந்த இருவர் கைது

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி