உள்நாடு

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்று  (01)  முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவலை அடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நிகழ்வுகள் மற்றும் வைபவங்கள் நடத்துவதற்கு தடை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் வாரம் முதல் ரூ.5,000 கொடுப்பனவு

பாடசாலைகளுக்குச் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்!

JUST NOW = தேரர் ஒருவர் சுட்டுக்கொலை!