உலகம்

ஹெலி விபத்தில் 5 பொலிசார் உயிரிழப்பு

(UTV | பொகோட்டா) – கொலம்பியா நாட்டின் பொலிவர் நகருக்கு தெற்கே கேன்டகல்லோ பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றுள்ளது. அதில் போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் 5 பொலிசார் உயிரிழந்து உள்ளனர். இதற்கு இரங்கல் தெரிவித்து அந்நாட்டு அதிபர் இவான் டக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,

“..கொலம்பியா நாட்டு பொலிஸில் 5 வீரர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வேதனை தெரிவிக்கின்றேன். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த பகுதியை பொலிசார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ராணுவ வீரர்களும் மீட்பு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். நம்முடைய நாட்டிற்காக எதனையும் விட்டு கொடுக்கும் நமது வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நாம் இருப்போம்..” என தெரிவித்து உள்ளார்.

   

Related posts

மீளவும் கொரோனா : மெல்போர்ன் நகரம் முடக்கம்

காசாவில் மின் விநியோகம் தடை – மக்கள் பெரும் அவதி

லசா காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பலி