விளையாட்டு

ஹெலிகாப்டர் விபத்தில் அமெரிக்க விளையாட்டு வீரர் உயிரிழப்பு

(UTV| கொழும்பு) – பிரபல அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டு வீரரான கோபி பிரயண்ட் ( Kobe Bryant) ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கோபி பிரயண்ட் மற்றும் அவரது மகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பிரயண்ட் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். கூடைப்பந்து விளையாட்டு வரலாற்றில் பிரயண்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்.

பிரயண்ட் உயிரிழப்புக்குப் பல விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.

தேசிய கூடைப்பந்து சங்கம் வெளியிட்டுள்ள, அறிக்கையில் ”13 வயதான ஜனா மற்றும் கோபி பிரயண்டின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்து உள்ளது. இது பேரிழப்பு” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விபத்து ஏற்பட்டதன் காரணத்தை விசாரிக்க அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு துறை குழு நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்- இந்திய அணி 15 ஆம் திகதி அறிவிப்பு

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஸ்வியாடெக்

2020 ஒலிம்பிக் தகுதி பெற்றவர்கள் நேரடியாக பங்கேற்கலாம்