சூடான செய்திகள் 1

ஹெரோயின் விநியோகித்த நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-பேருந்துகளின் மூலம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரை கலேவல காவல்துறையினர் னைது செய்துள்ளனர்.

கடுமையான ஹெரோயின் பாவணைக்கு உள்ளாகியுள்ள குறித்த நபர்,கொழும்பு – வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

அவரிடமிருந்து 25 கிராம் 240 மில்லிகிராம்ட  ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு வாழைத் தோட்டத்தைச் சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரினால், குறித்த நபருக்கு ஹெரோயினை பயன்படுத்தக் கொடுத்து, பின்னர் அவரையே யாழ்ப்பாணத்தில் போதைப் பொருட்களை விநியோகிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி பேருந்தில் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் அவர், வாழைத்தோட்டத்தில் உள்ள குறித்த வர்த்தகருடன் தொடர்புகொண்டு, அவரின் வழிகாட்டலுக்கு அமைய, யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவரிடம் சில காலமாக ஹெரோயினை விநியோகித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள முகவரால் அவருக்கு மீண்டும் ஹெரோயினைப் பயன்படுத்தக் கொடுத்து, பேருந்து மூலம் அவர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பன தகவல் கலேவல காவல்துறை பொறுப்பாளருக்கு இதற்கு முன்னதாக கிடைத்துள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம் கொழும்பிலிருந்து சென்ற குறித்த இளைஞனிடம் கைத்தொலைபேசி இல்லாத காரணத்தினால், அவர் கலேவலயில் வைத்து பேருந்திலிருந்து இறங்கியுள்ளார்.

இதையடுத்து, கிடைத்த தகவல்களுக்கு அமைய காவல்துறையினர் குறித்த சந்தேகத்துக்குரியவரை கைது செய்துள்ளனர்.

அவர் இன்றைய தினம் கலேவல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

இதன்போது ஏழு நாட்கள் தடுத்து வைத்திருக்கும் உத்தரவை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதுடன், சந்தேகத்துக்குரியவரை மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு விசாரணைப் பிரிவிடம் கையளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இறக்குமதி பழங்களுக்கு அடுத்த மாதம் முதல் வரி அதிகரிப்பு

அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

அதிவேக வீதியின் இருமருங்கிலும், மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்