உள்நாடு

ஹெரோயினுடன் பிடிபட்ட மீனவப்படகு கொழும்பு துறைமுகத்திற்கு

(UTV | கொழும்பு) – சர்வதேச கடற்பரப்பில் ஹெரோயினுடன் பிடிபட்ட மீனவப்படகு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பிராந்தியத்தில் கடந்த 11ஆம் திகதி 250 கிலோகிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட மீனவப்படகு இன்று (15) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கிடைத்த தகவலுக்கு அமைய, கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இலங்கையிலிருந்து 900 கடல் மைல் தொலைவில் குறித்த மீனவப்படகு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மீனவப்படகில் 6 மீனவர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் இராஜினாமா

நிதியமைச்சர் தலைமையில் புதிய குழு

பிரதான பணவீக்கம் மற்றும் தங்கத்தின் பெறுமதி மாற்றம்!