சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் கைதாகிய பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் 07 நாட்களுக்கு தடுத்து வைப்பு

(UTV|COLOMBO)-தெஹிவளை, அத்திடிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரையும் 07 நாட்கள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இந்த அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இலங்கை வரலாற்றிலேயே மிகப்பாரியளவிலான ஹெரோயின் போதைப் பொருளுடன் கடந்த 31ம் திகதி இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

 

 

 

 

 

Related posts

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

நீர்க்கட்டணம் உயர்வு – முழு விபரம் இணைப்பு

இவ்வருட முடிவுக்குள் ஒரு இலட்சம் பேருக்கு வாழ்வாதார உதவிகள் மன்னாரில் அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு