உள்நாடு

ஹெரோயினுடன் இளம் பெண் கைது.

(UTV|TRINCOMALEE)-திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் 590 மில்லிகிராம் ஹெரோயினுடன் 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர் எனவும் அவரது வீட்டில் ஹெரோயினை பதுக்கி வைத்திருந்த நிலையிலே சந்தேக நபரை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

மேலும் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணின் கணவர் ஏற்கனவே போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் என்றும் திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிசார்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை நில அதிர்வு

ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது