உலகம்

ஹெய்ட்டி பலி எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு

(UTV | ஹெய்ட்டி) – ஹெய்டியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1,297 ஆக உயர்வடைந்துள்ளது.

அண்டை நாடுகள் உதவி அனுப்ப விரைந்ததுடன், காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சனிக்கிழமையன்று 7.2 ரிச்செடர் அளவிலான நிலநடுக்கம், கரீபியன் நாட்டில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களை அழித்தது.

11 ஆண்டுகளின் பின்னர் ஹெய்ட்டியில் இடம்பெற்ற பாரிய அனர்த்தமாக இது கருதப்படுகிறது.

கடந்த மாதம் ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டு, நாடு தத்திளிப்பில் இருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தென்மேற்கு ஹெய்டி, குறிப்பாக லெஸ் கெய்ஸ் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் நிலநடுக்கததினால் பாரிய அழிவை சந்தித்தன.

சனிக்கிழமை ஏற்பட்ட இந்த பேரழிவு 1,297 உயர்களை காவு கொண்டுள்ளதுடன், மருத்துவமனைகள் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சுமார் 5,700 பேருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திணறி வருவதாக ஹெய்ட்டியின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    

Related posts

ஹொண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

BRAKEING NEWS = காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

ஜப்பானுக்கு செல்ல இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு தடை