அரசியல்உள்நாடு

ஹிஸ்புல்லாஹ் எம்பியினால் பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம் பழங்கள் பகிர்ந்தளிப்பு

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஏற்பாட்டில் எதிர்வரும் புனித நோன்பை முன்னிட்டு காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேச பள்ளிவாசல்களுக்கு ஈத்தம்பழங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி (அல் அக்ஸா) பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் புதன்கிழமை (19) இடம்பெற்றது.

இதன் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹி்ஸ்புல்லாஹ்வினால் பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம்பழங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா, காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் அஸ்பர், ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலாமாவின் செயலாளர் ஜவாஹிர், முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-எஸ். சினீஸ் கான்

Related posts

ஊரடங்கை அறிவிக்கும் நோக்கமில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

editor

மழையுடனான வானிலை – இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor

கப்பல் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் – இந்திய ஆளுநர் கிரண்பேடி