அரசியல்உள்நாடு

ஹிருணிகாவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை முன்வைத்து நாளை மறுதினம் (13) நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ஹர்டி ஜமால்டின் தாக்கல் செய்த முறைப்பாடு இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரினார்.

அதன்படி, நவம்பர் 29ஆம் திகதிக்கு முன் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 4ஆம் திகதி மீண்டும் அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அத்துடன், பிரதிவாதியான ஹிருணிகா பிரேமச்சந்திர, வழக்கு விசாரணை தினத்தன்று நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கடந்த 4 நாட்களில் 140 மில்லியன் வருமானம்

மேலதிக வகுப்புக்களுக்கான தடை ஒத்திவைப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உதயம்.

editor