உள்நாடு

ஹிருணிகாவுக்கு எதிராக முஸம்மிலின் மகன்: திகதி வழங்கிய நீதிமன்றம் 

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் காலவகாசம் வழங்கியுள்ளது.  ஊவா மாகாண ஆளுநர் மொஹமட் முஸம்மிலின் மகன் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

இலங்கையில் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு எப்போதும் ஆதரவு – மத்தியூ மில்லர்.

கொரோனா பலி எண்ணிக்கை 581ஆக உயர்வு

பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor