உள்நாடுசூடான செய்திகள் 1

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் பெய்யான சாட்சியம் : நீதிமன்றில் ஒப்புக்கொண்ட பௌசான்

(UTV | கொழும்பு) –

ஏப்ரல் மாத ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது ஏலவே கூறிய சாட்சியம் பொய்யென  அரசுதரப்பு சாட்சியாளர் பெளசான் நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

VIDEO NEWS:

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கு நேற்று  (14) புத்தளம் மேல் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தத போதே இவ்வாறு சாட்சியளித்துள்ளார்,

அங்கு அரசதரப்பு சாட்சியாளர் பெளசான் கூறுகையில்,

நான் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் முன்னர் வழங்கிய சாட்சியங்கள் அனைத்தும் பொய்யானை, எனக்கு மலிக் என்ற நபர் கூறிய விடயங்களையேl கூறியிருந்தேன், மயிக் இவற்றை கூற சொல்லியதனால் தான் கூறினேன் தவிர எதனையும் நேரில் காணவில்லை. ” என இன்று சாட்சியம் வழங்கியிருந்தார்.

ஏலவே, இன்று ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சாட்சியமளித்த பெளசானால் சட்டத்தரணி ஹிஜாஸ் எங்களுக்கு தீவிரவாத பயிற்சிகளை வழங்கியதாகவும், சஹ்ரான் மற்றும் அவரது சகோதர் ரில்வான் ஆகியோர் எமது கல்லூரிக்கு வருகை தந்திருந்ததாகவும், அவர்கள் பயிற்சி வழங்கியதாகவும் ஆரம்பத்தில் சாட்சியளித்தவைகளில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் வழங்கிய சாட்சியம் இன்று பொய்யாகியுள்ளது.

இந்த வழக்கின் போது,  ஐக்கிய நாடுகள், அமெரிக்கா தூதரகத்தின் அதிகாரிகள் மேற்பார்வையாளர்களாகவிருந்ததுடன். அடுத்த வழக்கு ஒக்டோபர் மாதம் 19, 20 ஆம் திகதிகளில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு பிரபல பாடசாலையின் 20 மாணவர்கள் கைது

சுகாதார விதிமுறைகளை மீறிய 47 பேர் கைது

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா முழுமையாக விடுதலை