உள்நாடு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 21 மாதங்களாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சார்பில் முன்னதாக புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த உத்தரவை திருத்த கோரி, பிரதிவாதி சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நேற்றுமுன்தினம் (7) பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவல ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயம், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, புத்தளம் மேல் நீதிமன்றின் உத்தரவுக்கமைய, இன்றைய தினம் அவரை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Related posts

இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில்

சரத் வீரசேகரவின் தமிழர்களுக்கு எதிரான இனவாத போக்கு : உக்கிரமடையும் எதிர்ப்பு