விளையாட்டு

ஹிஜாப் அணிய விதித்த தடைய நீக்கியது பிரான்ஸ்!

(UTV | கொழும்பு) –

பிரான்ஸில் உத்தியோகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டின் அதி உயர் நிர்வாக நீதிமன்றம்  இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் பெண்கள், மத ரீதியான ஆடைகளை அணிவதற்கு பிரெஞ்சு கால்பந்தாட்ட சம்மேளனம் தடை விதித்துள்ளது.

இத்தடையின்படி, ஹிஜாப் மற்றும் யூதர்களின் கிப்பா தொப்பி ஆகியனவற்றையும் போட்டியாளர்கள் அணிய முடியாது. தொழில்சார் அற்ற, அமெச்சூர் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கும் இவ்விதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
பிரான்ஸின் அதி உயர் நிர்வாக நீதிமன்றமான அரசியலமைப்புப் பேரவையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹிஜாப் அணிவதற்கான தடையை உறுதிப்படுத்தி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போட்டிகளை சுமுகமாக நடத்துவதற்குத் தேவையானவை என பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் நம்பும் விடயங்களை அமுல்படுத்தலாம் என அந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

LPL கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா ஸ்டேலியன்ஸ்

தனிமைப்படுத்தப்பட்ட சங்கக்கார