உள்நாடு

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

(UTV | கொழும்பு) – ஹிக்கடுவ, திராணகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு இன்று (31) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காகச் சென்ற இருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

‘பிம்ஸ்டெக்’ மாநாடு இலங்கையில்

இவைகளை ஏற்றுக்கொண்டதால் தான் சஜித்துக்கு நாம் ஆதரவு = விபரிக்கும் மனோ

இலங்கையில் தங்கத்திற்கு நிகராக மாறிய கரட்!