கேளிக்கை

ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் அல்லு அர்ஜூன்

(UTV |  புதுடில்லி) – தெலுங்கில் முன்னணி இயக்குனர் அல்லு அர்ஜூன். இவர் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

இதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஒருவரை சந்தித்து அவர் இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து அல்லு அர்ஜுன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

தேர்தலில் இந்த நடிகர்கள் எல்லாம் வாக்களிக்க முடியாதாம்…

தேவதையாக காட்சியளித்த தீபிகா படுகோன்…

டிரம்ப்பையும் விட்டு வைக்காத சிவா