விளையாட்டு

ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய 3வது வீரர்

(UTVNEWS|COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.

பும்ரா மொத்தமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்கா நகரில் நடைபெற்று வருகிறது, நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்க்சில் 461 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்பஜன் சிங்கும், 2006ல் பாகிஸ்தானுக்கு எதிராக இர்பான் பதானும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் அணி 2 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்கள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் விளையாடுவது சந்தேகம்?

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக லட்சுமணன்!