விளையாட்டு

ஹர்பஜன்சிங் இடத்தினை பிடிக்க 4 வீரர்கள்

(UTV | இந்தியா) – ஹர்பஜன்சிங் இற்கு பதிலாக இந்த நான்கு வீரர்களில் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வைக்கலாம் என தனது யூடியூப் சேனலில் 4 சாத்தியமான வீரர்களின் பெயர்களை ஆகாஷ் சோப்ரா பட்டியலிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh), வரவிருக்கும் ஐ.பி.எல்லின் 13 வது சீசனில் இருந்து தனது பெயரை வாபஸ் பெற்றுள்ளார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹர்பஜன் விளையாட திட்டமிடப்பட்டிருந்தார்.

ஆனால் தனிப்பட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டி தொடரில் இருந்து விலக முடிவு செய்தார். ஐபிஎல் 2020 (IPL 2020) ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஆரம்பமாகவுள்ளது.

இப்போது சென்னைக்கு சுழல் துறையில் இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர் மற்றும் பியூஷ் சாவ்லா போன்ற வீரர்களுடன் சேர்ந்து புதிய ஒருவரை விளையாட வைக்கலாம். இருப்பினும், முன்னாள் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக இந்த நான்கு வீரர்களில் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக விளையாட வைக்கலாம் என தனது யூடியூப் சேனலில் 4 சாத்தியமான வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.

Related posts

அகில தொடர்பில் ஐசிசி நிலைப்பாடு

இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இன்று

ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு கொரோனா