உள்நாடு

ஹர்த்தாலை முன்னிட்டு தமிழ் கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ளன.
இந்நிலையில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பில் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது அவ்வாறு எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர். வேறு கடிதங்களில் உள்ள கட்சித் தலைவர்களின் கையொப்பங்களை பயன்படுத்தி குறித்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளை செய்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி

மட்டக்களப்பில் இயற்கையான சரணாலயத்தில் சஞ்சரித்துள்ள வெளிநாட்டு பறவைகள்

editor

ஜனாதிபதிக்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor