வகைப்படுத்தப்படாத

ஹரி பாட்டர் புத்தகங்களுக்கு தடை

(UTVNEWS|COLOMBO) – அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில் ‘ஹரி பாட்டர்’ புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தை சேர்ந்த ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்கள் 1997 முதல் 2007 வரை 7 பாகங்களாக வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

‘ஹாக்வார்ட்ஸ்’ எனப்படும் மந்திரப்பள்ளியை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்ட இந்த புத்தகங்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் வசூலை குவித்தன. இன்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்களுக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில்‘ஹாரி பாட்டர்’ புத்தகங்களுக்கு தடை விதித்து, மாணவர்கள் யாரும் இனி அந்த புத்தகங்களை படிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, பள்ளி நூலகத்தில் இருந்த ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

“ஹாரி பாட்டர் புத்தகங்கள் நல்ல மற்றும் தீய சக்திகளை முன்வைத்து கற்பனையாக எழுதப்பட்டிருந்தாலும், அது ஒரு புத்திசாலித்தனமான ஏமாற்று வேலை. அந்த புத்தகங்கள் கற்பனையாக இருந்தாலும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சாபங்களும் மந்திரங்களும் உண்மையானவை என பாடசாலை பாதிரியார் டான் ரீஹில் மாணவர்களின் பெற்றோருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.

Related posts

பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

Former Defence Secretary, IGP admitted to hospital

மீதொட்டுமுல்லை குப்பைமேடு – உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு