உலகம்

ஹரமெயின் ரயில் நிலையம் அருகில் பாரிய தீ

(UTV | சவுதி அரேபியா) – சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள ஹரமெயின் ரயில் நிலையம் அருகில் பெரும் தீ விபத்து ஒன்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவின் அதிவேக ரயில் சேவையான ஹரமெயின் சேவை புனித நகரங்களான மக்கா – மதீனா இடையே ஜித்தா மற்றும் கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டி ஆகிய நகரங்கள் வழியாக சேவை வழங்கி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் வேகமான ரயில் சேவையாகக் குறித்த ரயில் சேவை இருந்து வருகின்றது.

இந்நிலையில், ஜித்தா ரயில் நிலையம் அருகில் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட கேபின்கள் இருந்த பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்தத் தீயை தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து நடந்த போது அந்த கேபின்களில் பணியாளர்கள் யாரும் இல்லாததால், இதனால் உயிரிழப்போ, யாரும் காயமோ அடையவில்லை என சவுதி அரேபிய உள்நாட்டுப் பாதுகாப்புப் படை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

Related posts

இன்னுமொரு தொற்று நோய்க்கு உலகம் இப்போதே தயாராக வேண்டும்

பொலிவியா ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

தென் கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் காலமானார்.