உள்நாடு

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சார பொதுக் கூட்டங்களும் நடத்தப்படாது

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப் பட்டிருந்தாலும், சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பு வரும்வரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சார பொதுக் கூட்டங்களும் நடத்த மாட்டோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக இன்று(21) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணைக்குழுவால், வாக்களிக்கும் முறைகளில் விஷேட தொழில்நுட்ப முறைகளை கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பு வரும்வரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரசார பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட மாட்டாது என நாமல் ராஜபக்ஷ ஏலவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராதாகிருஷ்ணன் தலைமையில் ஆசிரியர் சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது!

தற்காலியமாக நிறுத்தப்பட்ட மு.காவின் உயர்பீடக் கூட்டம்!

editor

சுகாதார துறையில் எழுந்துள்ள பாரிய சிக்கல்!