உள்நாடு

ஹம்பாந்தோட்டை – கொழும்பு அதிவேக வீதியின் போக்குவரத்து சேவை இன்று முதல்

(UTV|கொழும்பு)- தெற்கு அதிவேக வீதியின் ஹம்பாந்தோட்டை முதல் கொழும்பு வரையான பயணிகள் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஹம்பாந்தோட்டை – கொழும்பு, தங்காலை – கொழும்பு மற்றும் எம்பிலிப்பிட்டிய – கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இடையில் பேரூந்து சேவை ஆரம்பமாகின்றது.

இதற்கமைய ஹம்பாந்தொட்டை பேருந்து சாலைக்குட்பட்ட 4 பேருந்துக்களும், தங்காலை பேருந்து சாலைக்குட்பட்ட 4 பேருந்துக்களும் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளன.

இந்த 8 பேருந்து சேவைகள் அடங்கலாக 14 பேருந்து சேவைகள் அந்த பாதையூடாக இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சட்ட விதிமுறைகளுக்கு அமையவே ஹம்பாந்தோட்டை – கொழும்பு வரை இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

Related posts

சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் – விஜேதாச ராஜபக் ஷ

முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணி

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு