உலகம்உள்நாடு

ஹமாஸ்-இஸ்ரேல் போர்: நான் விட்டிருக்க மாட்டேன்-ஜோ பைடனை விமர்சிக்கும் டிரம்ப்

(UTV | கொழும்பு) –

ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர்.

குறித்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் கைதிகள் பரிமாற்றம் செய்ததுடன், ஈரானின் 6 பில்லியன் டொலர் பணத்தை பரிமாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் தெரிவிக்கையில்,

‘கொடுமை குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நான் உங்களுடைய ஜனாதிபதியாக இருந்தபோது, வலிமையின் காரணமாக நாம் அமைதியை பெற்றிருந்தோம். தற்போது நமக்கு பலவீனம், சிக்கல், குழப்பம் உள்ளது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது’ என தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவிற்கு கடும் பொருளாதாரம் சரிவு

ஜனாதிபதி தலைமையில் இலங்கை முதலீட்டு மாநாடு ஆரம்பம்

மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை