வகைப்படுத்தப்படாத

ஹப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காணொளி வெளியானது

(UTV|INDIA)-மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவர் பழச்சாறு அருந்தும் காணொளியொன்றை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமான கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஹப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், டிசம்பர் 5-ஆம் திகதி நள்ளிரவு உயிரிழந்தார்.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதாவின் எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை.

ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்பட யாருக்கும் அவரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

மருத்துவமனையில் சசிகலாதான் ஜெயலலிதாவை உடனிருந்து கவனித்து வந்தார்.

சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை ஒருநாளும் தான் சந்திக்கவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கூட தெரிவித்திருந்தார்.

தமிழக அமைச்சர்கள் அனைவரும் இதே கருத்தையே கூறி வந்தனர்.

இதனிடையே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழும்புவதால் அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் உள்பட பலதரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை முதலமைச்சர் பழனிசாமி அமைத்து உத்தரவிட்டார்.

விசாரணை ஆணையம் முன் திமுக மருத்துவர் அணியை சேர்ந்த சரவணன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஆணையம் இன்னும் தனது விசாரணையை தொடர்ந்து கொண்டு உள்ளது.

இந்நிலையில் ஹப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவர் பழச்சாறு அருந்தும் காணொளியொன்று வெளியாகி உள்ளது.

காணொளியில், படுக்கையில் கண் விழித்து சாய்திருந்தபடி, தனது இடது கையால் பழச்சாறு அருந்துகிறார்.

இந்த காணொளியை டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் சென்னையில் வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே மயக்க நிலையில்தான் இருந்தார் என கூறப்பட்டது.

எனவே மருத்துவமனையில் அவருக்கு சுயநினைவு திரும்பியதா..? என்னென்ன சிசிக்சைகள் வழங்கப்பட்டது என பலதரப்பிலும் கேள்வி எழும்பிய நிலையில் தற்போது ஜெயலலிதா சிகிச்சை பெறும் காணொளி வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த காணொளி எந்த திகதியில் எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரவில்லை.

ஜெயலலிதா மறைந்தே ஒரு வருடம் தாண்டிவிட்ட நிலையில் தற்போதுதான் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காணொளி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி கீழே….

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

 

Related posts

அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி கோரிய விவாதம் வௌ்ளிக்கிழமை

வௌ்ள நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்பட்ட மாணவன் பலி!

ரஷியாவில் 71 பேரை பலிகொண்ட விமான விபத்து குறித்து விசாரணை தீவிரம்